யாழ் பல்கலைகழகத்தின் முன்பாக இரண்டாவது நாளாகவும் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்கள்…. வெளியான தகவல்

யாழ். பல்கலைக்கழகப் பேரவையினால் ஒருக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்களில் ஒரு பகுதியினர் தங்களது தண்டனையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கோரி முன்னெடுக்கும் உணவு ஒறுப்புப் போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. நேற்று, பல்கலைகழக நிர்வாகத்தினால் மன்னிப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. எனினும், எழுத்து மூலம் அந்த வாக்குறுதி வழங்க வேண்டுமென வலியுறுத்தி மாணவர்கள் உண்ணாவிரதத்தை தொடர்கிறார்கள்.